க.பொ.த மாணவர்கள் 21.08.2010 இலிருந்து 27.08.2010 வரை அகில இலங்கைக்கான கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். இவர்களுடன் 15 ஆசிரியர்களும் இச்சுற்றுலாவில் பங்குபற்றினர். சுற்றுலாவானது 21.01.2010, சனிக்கிழமை காலை 6.30மணிக்குப் பாடசாலையில் இருந்து  ஆரம்பமாகியது.  அன்றைய தினம் மிகிந்தலை, அநுராதபுரம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டதுடன் உடப்பு திரௌபதை அம்மன் கலாசார மண்டபத்தில் இரவு ஓய்வு எடுத்தனர்.

22.08.2010, ஞாயிற்றுக்கிழமை  திரௌபதை அம்மன் ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு உடப்பு கடற்கரை, சிலாபத்தில் முன்னேஸ்வரம் ஆலயம், பேருவல கடற்கரை, நீர்கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம், கொழும்பு விஷ்ணு ஆலயம்,  மிருகக்காட்சி சாலை என்பன பார்வையிடப்பட்டன. அன்று இரவு பம்பலப்பிட்டி இராமநா தன் இந்து மகளிர் கல்லூரியில் ஓய்வெடுத்தனர்.