Motto
Shine On
Contact
chavaladiescollege@gmail.com principal@chavalady.sch.lk
Our Principal
Mrs.S.Sivanathan SLPS I

Archive for October, 2010

இன்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. சிதிதியடைந்த 6 மாணவர்களுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.  பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இவர்களுக்கான பரிசில்களை அன்பளிப்புச் செய்தும் வழங்கியும் கௌரவித்தனர்.

கைகழுவல் தினம்  ஒக்டோபர் 15ம் திகதி ஆகும்.

இதனையொட்டி பல செயற்பாடுகள் எமது கல்லூரியில் கல்வி வலயத்தின் அனுசரணையுடன்  செயற்படுத்தப்பட்டன.  சாவகச்சேரிப் பிரதேசத்தில்  விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவர்கள் , ஆசிரியர்கள் கொண்ட குழுவினால் நடாத்தப்பட்டது.

பொதுச் சுகாதார பரிசோதகர் ஊர்வலம் முற்றுப்பெற்றபின் கைகழுவுவதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி , மாணவர்களைக் கைகழுவச் செய்து பயிற்சியளித்தார்.

பாடசாலை மாணவர்களினால் கைகழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துமுகமாக பல கலைநிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

14.10.2010அன்று இடம்பெறும் சர்வதேச தரத்தினத்தை ஒடடி 2010 ஒக்டோபர் 11ம் திகதி முதல் 17ம் திகதி வரையான தினத்தை தேசிய கல்வித்தர வாரமாக கல்வியமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.    இவ்வாரத்தையொட்டி பாடசாலையில் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 

பாடசாலை உயர்தரம் கொண்டதாக மாற்றியமைக்கப்படல்

நற்பண்புகளைக் கொண்ட நற்பிரஜைகளை ஆக்கத்திறன் மிக்கவர்களாக உருவாக்கல் என்பதன் அடிப்படையில் இந்நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

எமது கல்லூரியில் இதனையொட்டி,

தரமான பாடசாலை மூலம் தரமான சமூகம் என்னும் சுலோகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை கல்விப் பண்புசார் தரச்சுட்டிகளைத் தயாரித்தல் தொடர்பாக ஆசிரியர்களுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

14ம் திகதி காலை ஒன்றுகூடலின் போது அதிபரினாலும் சிரேஷ்ட ஆசிரியர் திருமதி.பா.சிவகுமாரினாலும் மேற்படி விடயம் தொடா்பான விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இவ்விரிவுரையில் பிள்ளை கற்கும் பாடசாலை உயர்ந்த தரம் கொண்டதாக விளங்க வெண்டும்.  அதன் மூலம் நற்பண்புகள் கொண்ட ஆக்கத்திறன் மிக்க,  ஆளுமையுடைய,  சமூகத் தோற்றப்பாடுகளுக்கு இணக்கப்பாடடையக் கூடிய மாணவர்களை உருவாக்கமுடியும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.  மேலும்

  • பொதுமுகாமை
  • பௌதிக மற்றும் மனித வளங்கள்
  • முறையான பாடவிதான முகாமைத்துவம்
  • இணைபாடவிதான செயற்பாடுகள்
  • மாணவர் அடைவுமட்டம்
  • மாணவர் நலன்புரிச்சேவை
  • பாடசாலைச் சமூக உறவுகள்
  • அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்திற்காக மாணவர் அபிவிருத்தி

                                                               என்ற எட்டுப் பண்புக்கூறுகளை உள்ளடக்கி  அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகம் செயற்படுவதன் மூலம் தரமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பது மீளவும் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாரம் தகவல் தொழில்நுட்ப வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடுமுகமாக கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சிரமதானம்,  கருத்தரங்கு செயற்பாடுகள் 14.10.2010  நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் தொர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக IDM கல்வி நிறுவன சாவகச்சேரிப் பணிப்பாளர் திரு. ஐ. ஆதவன் அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும்  கருத்துரை வழங்கினார். அவருடன் முகாமையாளர் திரு. எம். துஸ்யந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்.

கல்லூரி நவராத்திரி வைபவம் 08.10.2010 ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்று வருகின்றது.  பாடசாலை மாணவர்கள் அனைவரும் இவ்விழாவில் பங்குபற்றி அன்னை பராசத்தியின் அருளைப் பெற்று வருகின்றனர்.  நவராத்திரியின் ஒன்பது தினங்களும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களாக விழாவினைப் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றனர்.  விஜயதசமி விழா 17.10.2010 , ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் திருமதி ரு. இராஜரட்ணம் அவர்களினால் ஏடு தொடக்கி வைக்கப்படும்.

Who are online
Useful Educational links
October 2010
M T W T F S S
« Sep   Nov »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Weather Report